1. "Our treatment of Adivasi is a blot on Indian democracy. Only someone who cares sincerely for the future of this country will say that. Others will say that ‘Oh no no, they are doing fine, they live wonderfully… It is all hyperbole, exaggerated and manufactured dissent.’ If you are in a mode of self-denial, you will stay where you are- a flawed, intolerant and imperfect society. The main task of any nationalist is to be ashamed of crimes committed against his fellow citizens in the name of nationalism."
-
Quote by Ramachandra Guha
2. "பாரபட்சம் அவரை துன்பப்படுத்தியது. அவர், ‘இன்னொரு மனிதரின் சிந்தனைகள் மோசமானவை, நம்முடைய சிந்தனைகளே நல்லவை என்றும், நம்மிடமிருந்து வேறுபடும் பார்வை கொண்டவர்கள் நாட்டின் எதிரிகள் என்றும் சொல்வது கெட்ட பழக்கம்"
-
Ramachandra Guha, Thenafricavil Gandhi
3. "நியாயமான வழிமுறைகளே நியாயமான விளைவுகளை உண்டாக்கும்; எல்லாவற்றிலும் இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் பெரும்பாலான நிகழ்வுகளில் அன்பு, இரக்கம் ஆகியவற்றின் சக்தி ஆயுதங்களின் சக்தியைவிட எல்லையற்ற அளவில் அதிகமானது. காந்தியைப்"
-
Ramachandra Guha, Thenafricavil Gandhi
4. "கல்வி தொடர்பான அத்தியாயம் ஒன்றில் காந்தி இந்தியாவுக்குள் ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளின் பயன்பாட்டைத் தீவிரமாக ஆதரித்தார். இந்தியர்கள் அனைவரும் தம் தாய் மொழியை அறிந்திருக்கவேண்டும். இந்தியை ஓர் இணைப்பு மொழியாக முன்னெடுக்கலாம். அதை எழுத தேவநாகரி அல்லது பாரசீக எழுத்துக்களைப் பயன்படுத்த அனுமதிக்கலாம்; இதன் மூலம் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இன்னும் நெருங்கிய தொடர்பை உருவாக்க முடியும்."
-
Ramachandra Guha, Thenafricavil Gandhi
5. "நீ மட்டும் தைரியத்தைக் கைவிடாமல் இருந்து, தேவையான சத்தான ஆகாரங்களையும் எடுத்துக்கொண்டால் உடம்பு சரியாகிவிடும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நீ காலமாகிவிட்டால், நான் உயிருடன் இருக்கையில் என்னிடமிருந்து பிரிந்திருக்கும்போது நீ அப்படிச் செய்வதில் குற்றம் எதுவும் இல்லை என்று மட்டும் சொல்வேன். நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்றால், நீ இறந்துவிட்டாலும்கூட என்னைப் பொறுத்தவரை வாழ்ந்துகொண்டுதான் இருப்பாய். உன் ஆன்மாவுக்கு மரணமில்லை. நான் அடிக்கடி சொல்லியிருப்பதை மீண்டும் சொல்கிறேன்: உன் வியாதி உன்னை எடுத்துச் சென்றுவிடுமானால், நான் இன்னொரு திருமணம் செய்துகொள்ளமாட்டேன். 33 இந்தக்"
-
Ramachandra Guha, Thenafricavil Gandhi
6. "நன்றியறிதல்கொண்ட அந்தத் தலைவர், தமிழர்கள் ‘மிகுந்த வீரத்தையும், மிகுந்த கடமைப் பற்றையும், மேலான எளிமையையும், காண்பித்திருக்கிறார்கள்; அப்படியிருந்தும் மிகுந்த அடக்கத்துடன் விளங்கினார்கள்"
-
Ramachandra Guha, Thenafricavil Gandhi
7. "மேத்தா கோபால கிருஷ்ண கோகலேவுக்கு ஒரு வியக்கத்தக்க கடிதத்தை எழுதினார். அது இப்படி ஆரம்பிக்கிறது: அன்புள்ள ஐயா, நான் சென்றமுறை ஐரோப்பாவுக்குச் சென்றிருந்தபோது திரு காந்தியை அதிகம் கண்டேன். ஆண்டுக்கு ஆண்டு (எனக்கு அவரை இருபது ஆண்டுகளாகத் தெரியும்) இன்னும் அதிகமாக அவர் தன்னலமற்றவராகிறார். இப்போது அவர் ஏறக்குறைய ஒரு துறவு வாழ்வு வாழ்ந்துவருகிறார்-நாம் வழக்கமாகப் பார்க்கும் சாதாரணமான துறவி அல்ல; மாறாக ஒரு மகாத்மா. தன் தாய்நாடுதான் அவரது மனதை ஆக்கிரமித்திருக்கும் ஒரே சிந்தனை. தன் நாட்டுக்காக உழைக்க விரும்பும் அனைவரும் காந்தியையும் அவரது சமீபத்திய நிறுவனங்களான ஃபீனிக்ஸ் குடியிருப்பு, ஃபீனிக்ஸ் பள்ளி ஆகியவற்றையும் குறித்துக் கற்கவேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. டிரான்ஸ்வாலில் அவரது வழிகாட்டலின்கீழ் நடத்தப்பட்ட சாத்விகமான எதிர்ப்பைப் பற்றியும் நேரில் சென்றால் நன்றாக அறிந்துகொள்ள முடியும். திரு போலாக் இப்போது இங்கே எங்களுடன் தங்கியிருக்கிறார்; ‘இந்தியாவின் சேவகர்கள்’ பிரமாதமான வேலை செய்வதாக என்னிடம் சொல்கிறார். எனக்குத் தோன்றுவது என்னவென்றால், இந்தியாவுக்காகப் பணியாற்றும் எந்த ஒரு ஊழியரின் கல்வியும் திரு காந்தியையும் அவரது நிறுவனங்களையும் பற்றிக் கற்காகதவரை முழுமையடைய முடியாது. கோகலேயின்"
-
Ramachandra Guha, Thenafricavil Gandhi
8. "காந்தி மேற்கத்திய நாகரிகத்தையும் கிழக்கத்திய நாகரிகத்தையும் வேறுபடுத்திக் காட்டினார். முன்னது பதற்றமானது, சுறுசுறுப்பானது, பரந்து விரியும் தன்மை கொண்டது; பின்னது ஆழ்ந்த சிந்தனை கொண்டது; உள் நோக்கி வளர்வது. இவை இப்போதைக்கு எதிர்மாறான போக்குகளாக இருக்கலாம்; ஆனாலும் ‘இயற்கையின் பொருளாதாரத்துக்கு ஒருவேளை இரண்டுமே தேவையானவையாக இருக்கக்கூடும்.’ இரண்டும் சந்திப்பதை அவர் வரவேற்றார். அதன்மூலம் கிழக்கத்திய நாகரிகம் ‘மேற்கத்திய உணர்வோடு வேகம் பெறும்’; இப்போது இலக்கில்லாமல் உள்ள பின்னதோ குறிக்கோள் ஒன்றைப் பெறும். காந்தி"
-
Ramachandra Guha, Thenafricavil Gandhi
9. "தமிழர்கள் எல்லா எதிர்பார்ப்புகளையும் விஞ்சிவிட்டார்கள். அவர்களது தலைவர்கள் எல்லோரும் இப்போது சிறையில் இருக்கிறார்கள்.’ பார்ஸிகளும் பாராட்டுக்குரியவர்களே. எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருந்தாலும் இந்திய அரசியல் களத்துக்குப் பெரிய அளவில் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவிலும்கூட, ‘அரசாங்கத்தின் புத்தியற்ற சட்டத்துக்குக் கட்டுப்படும் ஒரு பார்ஸியைக்கூட நாம் காண முடிவதில்லை.’ ‘இஸ்லாமியர்களும் குஜராத்தி இந்துக்களும் தமிழர்களுக்கும் பார்ஸிகளுக்கும் முன்னாள் தலைகுனிந்து நிற்கவேண்டும்’ என்று காந்தி கருதினார். 47 டிசம்பர்"
-
Ramachandra Guha, Thenafricavil Gandhi
10. "Had Shastri been given another five years, there would have been no Nehru–Gandhi dynasty. Sanjay Gandhi and Rajiv Gandhi would almost certainly still be alive, and in private life. The former would be a (failed) entrepreneur, the latter a recently retired airline pilot with a passion for photography. Finally, had Shastri lived longer, Sonia Gandhi would still be a devoted and loving housewife, and Rahul Gandhi perhaps a middle-level manager in a private sector company."
-
Ramachandra Guha, Patriots & Partisans